கோவிட் காலத்தில் நாட்டுக்கு திரும்பிய மக்களிடம் பணம் வசூலிக்கும் பிரபல நாடு!
கோவிட் பொதுமுடக்க காலத்தில் வேறு நாட்டிலிருந்து குடிமக்களை திருப்பி அனுப்புவதற்காக செலவழிக்கப்பட்ட சுமார் அரை மில்லியன் பிராங்குகள் பணத்தை திரும்பப் பெற சுவிஸ் அரசாங்கம் கடன் வசூலிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
கோவிட் தொற்றுநோய்களின் தொடக்கத்தில் அரசாங்கத்தின் செலவில் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட மக்களுக்கு எதிராக சுவிஸ் அதிகாரிகள் கடன் வசூல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
2020 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், கோவிட் தொற்றுநோயின் தீவிரம் தெளிவாகத் தெரிந்ததால், சுவிட்சர்லாந்து அரசு உலகம் முழுவதிலுமிருந்து சுவிஸ் குடிமக்களை அழைத்துவரத் தொடங்கியது.
35 பட்டய விமானங்களில் சுவிஸ் வரலாற்றில் மிகப்பெரிய குடிமக்க மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, இதில் 4,200 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
செலவில் பத்து சதவீதத்தை ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் சுட்டிக்காட்டினாலும், மீதமுள்ள தொகையை பயணிகள் செலுத்த வேண்டும். இதனால், சுவிஸ் அரசாங்கம் அதன் செலவுகளை ஈடுகட்ட 1,700 இன்வாய்ஸ்களை அனுப்பியுள்ளது.
இந்த தொகை ஆரம்பத்தில் அரை மில்லியன் பிராங்குகளுக்கு மேல் இருந்தபோதிலும், அரசாங்கம் கிட்டத்தட்ட 200,000CHF வரை தள்ளுபடி செய்துள்ளது.
மீதமுள்ள 380,000 CHF கடன் வசூல் நடைமுறைகள் மூலம் வசூலிக்கப்படும் என அரசாங்கம் நம்புகிறது.
பணம் செலுத்த வேண்டியவர்களில் பலர் வெளிநாட்டில் வசிப்பதால் இது மேலும் சிக்கலானது என அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.