இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் 11 மனித உரிமை அமைப்புகளுக்கு நிதி உதவி நிறுத்தம்: சுவிட்சர்லாந்து முடிவு
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள, பெண்கள் மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட 11 மனித உரிமை அமைப்புகளுக்கான நிதியுதவியை நிறுத்த, சுவிஸ் பெடரல் வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது.
சுவிஸ் தரப்பு கூறும் காரணம்
சுவிஸ் அரசாங்கம், நிதி வழங்கல் தொடர்பில், புதிய, ஆழமான பகுப்பாய்வு ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், திட்டங்களை மதிப்பிட உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.
காசாவில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு, உணவு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் மருந்துகள் வழங்கலை இஸ்ரேல் துண்டித்ததால், அது சர்வதேச மனிதநேய சட்டத்தின் கீழ் ஒரு போர்க்குற்றம் என்று கூறி, இந்த மாத துவக்கத்தில், ஐரோப்பிய அரசாங்கங்கள் 150 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி உதவியை நிறுத்தின.
தற்போது, சுவிட்சர்லாந்தும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள 11 மனித உரிமை அமைப்புகளுக்கான நிதியுதவியை நிறுத்த, முடிவு செய்துள்ளது.
Swissinfo
இருதரப்பிலும் இழப்புகள்
அக்டோபர் 7 அன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 230 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்,
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் ராணுவம் காசாவில் ஆயிரக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, காசாவில் உள்ள வீடுகளில் கிட்டத்தட்ட பாதி இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன.
காசா அதிகாரிகளின் கூற்றுப்படி, அக்டோபர் 7 முதல், 3,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 8,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நிதியுதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பல அமைப்புகளின் தாயகமான மேற்குக் கரையில், கொல்லப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு கோரிக்கை
மனித உரிமைகள் பாதுகாவலர்களைப் பாதுகாப்பதற்கான சுவிஸ் வழிகாட்டுதல்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய வழிகாட்டுதல்கள் மற்றும் ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் பாதுகாவலர்களுடன் நிற்பதற்கு சுவிட்சர்லாந்து உறுதிபூண்டுள்ளது.
ஆனால், தற்போது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள, பெண்கள் மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட 11 மனித உரிமை அமைப்புகளுக்கான நிதியுதவியை நிறுத்த, சுவிஸ் பெடரல் வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது.
Human Rights Watch
சுவிட்சர்லாந்து நிதி உதவியை நிறுத்துவதாக தற்போது எடுத்துள்ள இந்த முடிவு, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களின் பாதுகாவலர்களுடன் நிற்பதாக எடுத்த உறுதிப்பாட்டை கைக்கொள்வதை கடினமாக்கியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மனித உரிமை பாதுகாவலர்களின் பணி முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் முக்கியமானதாக ஆகியுள்ள நிலையில் சுவிட்சர்லாந்து இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது, அவர்களைத் திணறடிப்பதாக அமையும். ஆகவே, மீளாய்வை மேற்கொள்ளும் அதே நேரத்தில், சுவிட்சர்லாந்து இந்த மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான நிதியுதவியையும் நிறுத்தாமல் தொடரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |