ஜப்பான் உணவுகள் மீதான இறக்குமதி தடையை நீக்க சுவிட்சர்லாந்து முடிவு: பின்னணி
2011ஆம் ஆண்டு, ஜப்பான் மாகாணமான ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட அணு உலை வெடிப்பிற்குப் பிறகு, ஜப்பானின் சில பகுதிகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பல நாடுகள் தடை விதித்தன.
தடையை நீக்க சுவிட்சர்லாந்து முடிவு
இந்நிலையில், ஆகஸ்டு 15 அன்று, சுவிட்சர்லாந்து, அந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்கத் திட்டமிட்டுள்ளதாக ஃபுகுஷிமா மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகளைப் பின்பற்றி, சுவிட்சர்லாந்தும் ஃபுகுஷிமா உட்பட 10 மாகாண விவசாய மற்றும் மீன்வள தயாரிப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மீதமுள்ள கட்டுப்பாடுகளை அகற்ற உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்சர்லாந்து இந்த கட்டுப்பாடுகளை அகற்றுவதைத் தொடர்ந்து, ஜப்பானிய உணவுப் பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்கும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் எண்ணிக்கை 10 ஆக குறைய உள்ளது.
ஒரு கட்டத்தில், ஃபுகுஷிமா பேரழிவிற்குப் பிறகு கதிர்வீச்சு மாசுபாடு பற்றிய அச்சம் காரணமாக மொத்தம் 55 நாடுகள் ஜப்பானிய உணவு இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |