இந்தியாவில் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் 100 பில்லியன் டொலர் முதலீடு!
இந்தியாவில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் 100 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒப்பந்த வர்த்தக அமைப்பின் (EFTA) உறுப்பினர் நாடுகள், ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டெய்ன் மற்றும் நோர்வே, இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய உள்ளது.
இதனை, மும்பையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் தூதர் மார்டின் உ. மையர் (Martin U Maier) தெரிவித்துள்ளார்.
போபாலில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய மார்டின், இந்த முதலீட்டு உறுதி, சமீபத்தில் இந்தியா மற்றும் EFTA நாடுகள் இடையே கையெழுத்திடப்பட்ட வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (TEPA) ஒரு பகுதி என்று கூறினார்.
"இந்தியா தற்போது உலகின் பல்வேறு நாடுகளிடமும் முதலீடுகளுக்காக போட்டியிடுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுவிஸ் நிறுவனங்களை இந்தியாவில் தொழில்துறை முதலீடுகளை அதிகரிக்க ஊக்குவிக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
மேலும், சுவிஸ் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்துறை மற்றும் உற்பத்தி செயல்பாடுகளை வலுப்படுத்தி, உலகளாவிய வழங்கல் சங்கிலியில் இந்தியாவை முக்கியமான மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளன.
இந்திய அரசு வணிகத்தை எளிதாக்கும் முயற்சிகளில் சிறந்த முன்னேற்றம் காட்டியுள்ளதாகவும் மையர் பாராட்டினார்.
இந்த 100 பில்லியன் டொலர் முதலீட்டு திட்டம், இந்தியா-EFTA நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவை வளர்க்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Switzerland, European Free Trade Association, EFTA nations, Iceland, Liechtenstein, Norway, investment in India