மின்கட்டணம் தொடர்பில் சுவிஸ் மக்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி
Swiss electricity bills to fall in 2027: 2027ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் மின்கட்டணங்கள் குறைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸ் மக்களுக்கு மின்கட்டணம் தொடர்பில் சற்று ஆறுதலளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
குறையவிருக்கும் மின்கட்டணம்
2027ஆம் ஆண்டில், மின்கட்டணம் சராசரியாக 4 சதவிகிதம் குறைய உள்ளதாக, சுவிஸ் ஃபெடரல் மின்சார ஒழுங்குமுறை அமைப்பான ElCom தெரிவித்துள்ளது.

இதனால், ஆண்டொன்றிற்கு 4,500kWh மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடொன்றிற்கான மின்கட்டணம், 1.194 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருக்கும். இது 2026ஐ ஒப்பிடும்போது, 53 சுவிஸ் ஃப்ராங்குகள் குறைவு ஆகும்.
அதாவது, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் ஒப்பந்ததாரர்களுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளது.
அதைத் தொடர்ந்து, விலை குறைவாக மின்சாரம் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்கப்பட இருப்பதாலேயே இந்த மாற்றம் ஏற்பட உள்ளது.
உண்மையில், சமீபத்தில் மின்சார மொத்த கொள்முதல் விலை அதிகரித்துள்ளது. ஆனால், சுவிட்சர்லாந்து, அடுத்த ஆண்டுக்கான மின்சாரத்தை ஏற்கனவே வாங்கிவிட்டதால், இந்த விலை உயர்வு சுவிஸ் மக்களை பாதிக்காது.
கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்து முழுவதும் மின்கட்டணம் ஒரே மாதிரியாக இருக்காது. சில இடங்களில் மின்கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.