மருத்துவ அமைப்பில் சிறந்து விளங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால்...
சுவிட்சர்லாந்து OECD நாடுகளில் மருத்துவ அமைப்பில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றாகும். ஆனால், கொரோனா தடுப்பூசித் திட்டத்தில் மட்டும் அது பின்தங்கியிருப்பதாக சர்வதேச அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
OECD என்னும், பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகள் (Organisation for Economic Co-operation and Development) என்ற அமைப்பின் கீழ் உள்ள நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, OECD நாடுகளில் மருத்துவ அமைப்பு சிறப்பாக உள்ளது. அந்த அமைப்பால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நாடுகளில், அதிக ஆண்டுகள் வாழ்வோரைக் கொண்டுள்ள நாடுகளில் சுவிட்சர்லாந்து உச்சத்தில் உள்ளது.
ஆனால், கொரோனா தடுப்பூசி வழங்கலைப் பொருத்தவரை, 2021 நவம்பர் துவக்கத்தில் 63 சதவிகித சுவிஸ் நாட்டவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தார்கள். ஆனால், மற்ற OECD நாடுகளில் சராசரியாக 65 சதவிகிதம்பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றாயிற்று.
2021 ஜூலை 1 நிலவரப்படி, அதிகம் தடுப்பூசி பெற்றவர்கள் நாடுகள் பட்டியலில், அதாவது OECD நாடுகளில், 11ஆவது இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து, நவம்பர் 1 நிலவரப்படி, குறைவான தடுப்பூசி பெற்ற நாடுகள் பட்டியலில் 15ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.
அதற்கு தடுப்பூசிகள் குறித்த தவறான கருத்துக்கள் உலாவருவதும் ஒரு காரணம் ஆகும்.
இன்னொரு பக்கம், மருத்துவ சேவைகளில் உச்சத்திலிருக்கும் சுவிட்சர்லாந்து, மருத்துவக் கட்டணங்களைப் பொருத்தவரை அதிக செலவு ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாகவும் OECD அமைப்பு தெரிவித்துள்ளது.