இஸ்ரேலின் Barak MX ஏவுகனை பாதுகாப்பு அமைப்பை வாங்க சுவிட்சர்லாந்து திட்டம்
Switzerland Eyes Israeli Barak MX System: அமெரிக்காவின் Patriot ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சுவிட்சர்லாந்து மாற்று வழிகளை தேடுகிறது.
இஸ்ரேலின் Barak MX அமைப்பை வாங்க திட்டம்
சுவிட்சர்லாந்து தனது நீண்ட தூர வான்வழி பாதுகாப்பு திட்டத்தில் புதிய மாற்றங்களை ஆராய்கிறது. சுவிஸ் அரசு, இஸ்ரேலின் Barak MX மற்றும் பிரான்சின் SAMP/T NG ஆகிய இரண்டு அமைப்புகளை குறுகிய பட்டியலில் சேர்த்துள்ளது.

இவை, சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. அதிகாரிகள், Patriot ஆர்டரை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர். அதற்கு மாற்றாக, கூடுதல் பாதுகாப்பு அமைப்பை இணைப்பதே தற்போதைய திட்டமாக உள்ளது.
இந்த முடிவு, 2027 ஆரம்பத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றம், CHF 24 பில்லியன் மதிப்பிலான கூடுதல் பாதுகாப்பு நிதி தொகுப்பை பரிசீலிக்க உள்ளது. இதில், CHF 6 பில்லியன் நீண்ட தூர பாதுகாப்பு அமைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் பயன்படுத்தப்படும் Barak MX
Barak MX அமைப்பு, பல நாடுகளில் ஏற்கனவே பயன்படுத்தப்படுகிறது. ஸ்லோவாக்கியா, சைப்ரஸ், இந்தியா, அசர்பைஜான் ஆகியவை இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன. மேலும், மொராக்கோ, UAE, தாய்லாந்து ஆகிய நாடுகளும் இதனை வாங்கியுள்ளன.
Barak MX, நிலத்தில் மட்டுமல்லாமல் கடற்படைகளிலும் பயன்படுத்தக்கூடியது. இது, விமானங்கள், ட்ரோன்கள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் நோக்கம், ஒரே சப்ளையர் மீது சார்ந்து இருக்காமல், பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பங்களை இணைத்து, பாதுகாப்பை வலுப்படுத்துவதாகும். தற்போதைய புவியியல் சூழ்நிலை, வலுவான வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை அவசியமாக்குகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |