சுவிட்சர்லாந்தில் விவசாயிக்கு நேர்ந்த பரிதாபம்., விசாரணையில் பொலிஸார்
சுவிட்சர்லாந்தில் 59 வயதான விவசாயி ஒருவர் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்தில் உள்ள Knonau பகுதியில் சனிக்கிழமையன்று இந்த கொடூர சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சூரிச் கன்டோனல் பொலிஸார் இது குறித்து வெளியிட்ட செய்தியில், 59 வயதான விவசாயி, சனிக்கிழமை பிற்பகலில் பண்ணையில் வேலை செய்யும்போது கால்நடைகளுக்கான தீவினங்களை அரைக்க பயன்படுத்தப்படும் மிக்சர் ஃபீடர் இயந்திரத்தில் ஏறியுள்ளார். அப்போது அதற்குள் விழுந்த அவர் படுகாயமடைந்தார்.
Picture: Google Maps
உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தபோது, குறித்த விவசாயி பலத்த வெட்டுக்காயங்கள் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிசெய்தனர்.
இந்நிலையில், விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Picture: 20min / Marco Zangger
சம்பவ இடத்தில் கன்டோனல் பொலிஸ் மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தவிர, சூரிச் தடயவியல் நிறுவனம், சூரிச் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ நிறுவனம், Affoltern am Albis base தீயணைப்புத் துறை, Knonaueramt Süd தீயணைப்புத் துறை, Rega, Zug மீட்பு சேவை, ஒரு அடிப்படை தீயணைப்புத் துறையின் பராமரிப்புக் குழு மற்றும் அவசரகால போதகர் ஆகியோர் பணியில் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.