சுவிட்சர்லாந்தில் முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்ட தேவாலய பொறுப்பு!
சுவிட்சர்லாந்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண் தேவாலயத்தில் இரவு நேர காவலாளியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலின சமத்துவத்தில் பின்தங்கியிருக்கும் நாடான சுவிட்சர்லாந்தில் பெண்களின் உரிமைகளை நிலைநாட்ட இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் Vaud மாநிலத்தில் உள்ள லவுசேன் (Lausanne) தேவாலயத்தில் கசாண்ட்ரே பெர்டோஸ் (Cassandre Berdoz) எனும் 28 வயது பெண் Night Watch பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், அவர் 600 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முதல் பெண்ணாக அவர் மாறியுள்ளார்.
Picture: Clara Tuma/The New York Times
இரவு கண்காணிப்பில் இருப்பவர், தேவாலயத்தின் உயரமான கோபுரத்தின் மையத்தில் தரையில் இருந்து 75 மீட்டர் உயரத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்ட குகையில் அமர்ந்து, தீவிபத்து போன்று ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும்போது அதற்கான செய்தியை நகரத்தின் கூரைகள் முழுவதும் அடிவானத்தில் நான்கு புள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.
Picture: Clara Tuma/The New York Times