கொடூர குற்றங்கள் செய்துவிட்டு சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரிய முன்னாள் அமைச்சர்: சுவிட்சர்லாந்தில் இன்று விசாரணை துவக்கம்...
காம்பியா நாட்டின் சர்வாதி ஒருவரின் கீழ் உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர் மீது பகீர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கு இன்று சுவிட்சர்லாந்தில் விசாரணைக்கு வருகிறது.
உள்துறை அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டுகள்
காம்பியா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Yahya Jammeh. அவரது ஆட்சிக்காலத்தின்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் Ousman Sonko (54).
2000க்கும் 2016க்கும் இடையில், கொலை, பல வன்புணர்வுக்குற்றங்கள் மற்றும் சித்திரவதை முதலான கொடூரச் செயல்களில் ஈடுப்பட்டதாக Ousman மீது குற்றம் சாட்டப்பட்டது.
2017ஆம் ஆண்டு, Yahya புரட்சியாளர்களால் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட, அவரது 22 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, Ousman சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரிய நிலையில், அவர் சுவிஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்டோர் மகிழ்ச்சி
குற்றச்செயல்களில் ஈடுபட்டு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் Ousman வழக்கு விசாரணைக்கு வருகிறது. இன்று அவரது வழக்கு விசாரணைக்கு வருவதைத் தொடர்ந்து, அவரால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட கால காத்திருப்புக்குப் பின் இப்போதாவது அவர் நீதிக்கு முன் கொண்டுவரப்பட்டாரே என நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
Reuters File
Ousmanஆல் தொடர்ந்து பலமுறை வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பின்றா (Binta Jamba) என்னும் பெண், ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி ஒன்றின்போது தன் கணவர் Ousmanஆல் கொல்லப்பட்டதாகவும், தன்னை பிணைக்கைதியாக வைத்துக்கொண்டு தொடர்ந்து அவர் தன்னை வன்புணர்ந்ததாகவும், தான் கருவுற்றபோதெல்லாம், Ousman தனக்கு கருக்கலைப்பு செய்ததாகவும் கூறுகிறார்.
தானும் தனது குடும்பமும் நீதிக்காக 25 ஆண்டுகள் காத்திருப்பதாகக் கூறும் பின்றா, தனக்கு நீதி கிடைக்கும் வரை தனக்கு நிம்மதி கிடைக்காது என்றும் கூறுகிறார்.
Ousmanக்கு, அதிகபட்சமாக ஆயுதண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
SRF
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |