சுவிட்சர்லாந்தில் 6 பில்லியன் டொலர் மதிப்புள்ள ரஷ்ய சொத்துக்கள் முடக்கம்
உக்ரைனுக்குள் ரஷ்ய இராணுவம் படையெடுத்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ரஷ்யர்களின் சொத்துக்களை அடையாளம் கண்டு முடக்க சுவிஸ் வங்கிகள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தில் உள்ள சுமார் 5.75 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் ($6.17 பில்லியன்) மதிப்புள்ள ரஷ்ய சொத்துக்களை சுவிஸ் அரசாங்கம் முடக்கியுள்ளது என பொருளாதார விவகாரங்களுக்கான செயலகம் (SECO) பொருளாதாரத் தடைகளை மேற்பார்வையிடும் நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
அதில், சுற்றுலா விடுதிகளாக செயல்பட்ட மண்டலங்களில் உள்ள பல சொத்துக்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், உக்ரைன் மீது படையெடுக்கத் தொடங்கியதிலிருந்து இப்போது வரை முடக்கப்பட்ட அல்லது தடைகளுக்கு உட்பட்ட ரஷ்ய சொத்துக்களின் அளவை மதிப்பிட சுவிட்சர்லாந்து அரசு மறுத்துவிட்டது.
REUTERS/Pierre Albouy
சுவிட்சர்லாந்தின் வங்கி லாபி மதிப்பீட்டின்படி, அதன் வங்கிகள் 213 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ரஷ்ய செல்வத்தை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.