ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய தண்ணீர் பேட்டரியை உருவாக்கி சாதனை படைத்துள்ள சுவிட்சர்லாந்து!
மின்சாரத்தை உருவாக்குவதுடன், சேமித்துவைக்கும் வசதியும் கொண்ட பிரம்மாண்ட நீர்மின் நிலையம் ஒன்றை உருவாக்கியுள்ளது சுவிட்சர்லாந்து.
இந்த நீர்மின் நிலையத்தில், 400,000 கார் பேட்டரிகளில் கிடைக்கும் அளவுள்ள மின்சாரம் சேகரித்து வைக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் பல, மின்சார தட்டுப்பாடு தொடர்பில் குளிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய தண்ணீர் பேட்டரியை உருவாக்கியுள்ளது சுவிட்சர்லாந்து!
அதாவது, மின்சாரத்தை உருவாக்குவதுடன், சேமித்துவைக்கும் வசதியும் கொண்ட நீர்மின் நிலையம் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளது சுவிட்சர்லாந்து.
Valais மாகாணத்தில், கடல் மட்டத்திலிருந்து 2,225 மீற்றர் உயரத்தில், மலை ஒன்றைக் குடைந்து இந்த நீர்மின் நிலையத்தை உருவாக்கியுள்ளது சுவிட்சர்லாந்து.
Keystone / Laurent Gillieron
நாளொன்றிற்கு 900 மெகாவாட் மின்சாரத்தை இந்த மின் நிலையத்தால் உருவாக்க முடியும். இது சுவிஸ் அணுமின் நிலையம் உருவாக்கும் அளவுக்கு சமமான மின்சாரம் என்பதால், ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமாகியுள்ளது The Nant de Drance என்னும் இந்த நீர்மின் நிலையம்.
இந்த நீர்மின் நிலையத்தின் சில கூடுதல் சிறப்பம்சங்கள் என்னவென்றால், பொதுவாக நீர்மின் நிலையத்தில் மின்சாரத்தை உருவாக்குவதற்கான பாகங்களை சுழலச் செய்யும் நீர் வெளியேறி கடலில் கலந்துவிடும். ஆனால், இங்கோ, அந்த நீரை மீண்டும் பம்ப் செய்து சேகரித்து வைத்துக் கொண்டு மின்சாரம் தேவைப்படும்போது பயன்படுத்தமுடியும்.
இந்த நீர்மின் நிலையத்தில் 400,000 கார் பேட்டரிகளில் கிடைக்கும் அளவுள்ள மின்சாரத்தை சேகரித்து வைக்கமுடியும்.
இன்னொரு விடயம், ஐரோப்பாவின் மற்ற பகுதிகளில் சூரிய சக்தி மூலம் உருவாக்கப்படும் மின்சாரத்தையும் இங்கு சேகரித்து வைத்துக்கொண்டு, வெயில் இல்லாத நாட்களில் அதை பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.