பெண் அகதிகள் சிலருக்கு புகலிடம் அளித்துள்ள சுவிட்சர்லாந்து... ஒரு சுவாரஸ்ய தகவல்
ஆப்கன் நாட்டிலிருந்து மீட்டுவரப்பட்ட பெண்கள் சிலருக்கு சுவிட்சர்லாந்து புகலிடம் வழங்கியுள்ளது.
இதில் விசேடம் என்னவென்றால், அந்த பெண்கள் ஆப்கன் நாட்டு சைக்கிள் பந்தய வீராங்கனைகள்!
அவர்களை மட்டுமின்றி, மொத்தம் 165 ஆப்கன் அகதிகளை மீட்க, The Union Cycliste Internationale (UCI) என்னும் சர்வதேச சைக்கிள் பந்தயங்கள் நடத்தும் அமைப்பு உதவியுள்ளது. இந்த அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்திலுள்ள Aigle நகரில்தான் உள்ளது.
அப்படி UCIஆல் மீட்கப்பட்ட 165 ஆப்கன் அகதிகளில் 38 பேர் ஜெனீவா வந்துள்ளார்கள்.
அந்த 38 பேரில், சைக்கிள் பந்தய வீராங்கனைகள் சிலருக்கு தற்போது சுவிட்சர்லாந்து புகலிடம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.