ரஷ்யாவுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ள சுவிட்சர்லாந்து...
ரஷ்ய தொழிலதிபர்களுக்கு சுவிட்சர்லாந்து புகலிடமாக இருக்கும் என நம்பிக்கொண்டிருந்திருக்கிறது ரஷ்யா.
ஆனால், ரஷ்யாவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது சுவிட்சர்லாந்து.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து பல நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்த நிலையில், நடுநிலைமை நாடான சுவிட்சர்லாந்து உக்ரைன் பிரச்சினையில் தலையிடாது, தொடர்ந்து சுவிட்சர்லாந்துடன் வர்த்தகம் செய்யலாம் என நம்பிக்கொண்டிருந்தது ரஷ்யா.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து சுவிட்சர்லாந்தும் தடைகள் விதிக்கும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை ரஷ்யா என்கிறார் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான முன்னாள் ரஷ்ய தூதரான Boris Bondarev.
உக்ரைன் மீது ரஷ்யா பொர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் தனது தூதர் பதவியை ராஜினாமா செய்த Boris Bondarev, தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்துவருகிறார்.
உக்ரைன் போர் நீண்டுகொண்டே செல்வதைக் கண்டு மேற்கத்திய நாடுகள் சலித்துப்போகும் வரை காத்திருப்பதுதான் ரஷ்யாவின் யுக்தி என்று கூறியுள்ள Boris Bondarev, அப்படி நடக்காததால், இந்த குளிர்காலத்தில் ஐரோப்பிய மக்களை குளிரில் உறையச் செய்வதை உறுதிசெய்துகொள்ளவிரும்புகிறது ரஷ்யா என்கிறார்.
Copyright 2022 The Associated Press. All Rights Reserved.
இந்த உக்ரைன் போரால் நாமும் ஏன் அவஸ்தைப்படவேண்டும் என்ற நிலையை அடையும் மக்கள், அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து உக்ரைனை ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்திக்கும் நிலை உருவாகவேண்டும் என ரஷ்யா காத்திருப்பதாக தெரிவிக்கிறார் அவர்.
சுவிட்சர்லாந்து நடுநிலை வகிக்கும் என நம்பி ஏமாந்த ரஷ்யா, சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ரஷ்யா மீது தடைகள் விதித்ததால், தற்போது சுவிட்சர்லாந்தை நட்பு நாடு அல்லாத நாடு என வகைப்படுத்தியுள்ளதுடன், ரஷ்ய தூதரகம், அந்நாட்டைக் குறித்து எதிர்மறையான ட்வீட்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.