நாடொன்றிற்கு விசா வழங்குவதை நிறுத்திவைத்துள்ள சுவிட்சர்லாந்து: காரணம் இதுதான்
இந்தியாவிலிருந்து சுவிஸ் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு புதுடெல்லியிலுள்ள சுவிஸ் தூதரகம், செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.
குழுக்களுக்கு விசாக்கள் வழங்கப்படாது
அது என்னவென்றால், குழுக்களாக சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வோர் சார்பில் அளிக்கப்படும் விசா விண்ணப்பங்கள், செப்டம்பர் மாதம் வரை ஏற்றுக்கொள்ளப்படாது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Keystone / Alessandro Della Bella
அதாவது சுவிஸ் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு மொத்தமாக விசாக்கள் வழங்கப்படாது. ஆகவே, சுற்றுலாவை பின்னொரு நாளுக்கு தள்ளி வைத்துக்கொள்ளுமாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
கொரோனாவால் விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு, அந்த நிலை இப்போது மாறியிருந்தாலும், மூன்றாம் நாடுகளிலுள்ள விசா அலுவலக அலுவலர்கள் இன்னமும் கொரோனாவுக்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பவில்லை.
Swissinfo
ஆகவே, குழுக்களாக சுற்றுலா செல்வோருக்கான விசாக்களைப் பரிசீலிப்பதில் பிரச்சினை உள்ளது. அலுவலர்கள் பற்றாக்குறையும் உள்ளதால் விசா வழங்குவது மேலும் கடினமாக உள்ளது. இதனால்தான் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு மொத்தமாக விசாக்கள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |