உடனே வன்முறையை நிறுத்துங்கள்... இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கெதிராக குரல் கொடுத்துள்ள சுவிட்சர்லாந்து
இஸ்ரேல் மீதான தாக்குதலை சுவிட்சர்லாந்து வன்மையாக கண்டித்துள்ளது.
உடனே வன்முறையை நிறுத்துங்கள்...
இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர்த் தாக்குதல் நடத்தியதற்கு, சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள சுவிஸ் வெளிவிவகாரங்கள் துறை, உடனடியாக வன்முறையை நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை கண்டித்துள்ளது சுவிட்சர்லாந்து மட்டுமல்ல, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் ஹமாஸின் தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |