ஆபத்தான பகுதி... சுவிட்சர்லாந்துக்கு ஒரேயடியாக தடை விதித்த முக்கிய ஐரோப்பிய நாடு
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை காரணமாக கூறி, சுவிட்சர்லாந்தை ஆபத்து மிகுந்த பகுதி என முக்கிய ஐரோப்பிய நாடான ஜேர்மனி அறிவித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா புதிய மாறுபாடு அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், பல நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளத்தை சுட்டிக்காட்டியுள்ள ஜேர்மனி, தற்போது போலந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை அதிக பாதிப்பு மிகுந்த நாடுகளாக அறிவித்துள்ளது.
இது ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது. மேலும், எவரேனும் அதிக பாதிப்பு மிகுந்த நாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் ஜேர்மனிக்குள் நுழைந்தாலோ அல்லது சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தாலோ 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.
ஆனால், ஐந்து நாட்களுக்குள் கொரோனா பாதிப்பில்லை என்பதை உறுதி செய்து கொண்டால், தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.
மேலும், பெர்லின் பகுதியில் அமைந்துள்ள வெளிவிவகார அலுவலகத்தில் இருந்தும் தொடர்புடைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.