சுவிஸ் செல்லும் பிரித்தானியா சுற்றுலா பயணிகளுக்கு சிக்கல்! வெளியான முழு விபரம்
இன்றைய நிலவரப்படி சுவிட்சர்லாந்து அதன் கொரோனா சான்றிதழ் பெறுவதற்கு ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை ஏற்காது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்ய விரும்பும் ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பிரித்தானியர்கள் கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துக்கான பிரதிநிதி செய்தித்தாளிடம் அளித்த தகவலின் படி, ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளைப் போலவே, சுவிஸ் அரசும் செப்டம்பர் 13 முதல் உணவகங்களில் மற்றும் பிற இடங்களில் நுழைய கொரோனா சான்றிதழ்கள் கட்டாயம் என்று அறிவித்தது.
தற்போது, சுவிஸ்/ஐரோப்பிய ஒன்றிய கொரோனா சான்றிதழ் பெற ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்ட நபர்கள் தகுதியற்றவர்கள்.
இருப்பினும், சுவிஸ் சான்றிதழுக்கான ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை ஏற்றுக்கொள்வது மற்றும் NHS உடன் சுவிஸ் சான்றிதழை எவ்வாறு பெறுவது என்பது குறித்து உறுதிப்படுத்தும் பணியில் சுவிஸ் அரசு ஈடுபட்டுள்ளது.
விரைவில் இதில் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்போதைக்கு உணவகங்களில் மற்றும் பிற இடங்களில் நுழைய ஒவ்வொரு நாளும் விரைவான ஆன்டிஜென் சோதனை மேற்கொள்வதே ஒரே வழி.
இந்த மாதம் இறுதி வரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுவிட்சர்லாந்தில் விரைவான ஆன்டிஜென் சோதனை இலவசம்.
வெளிப்புற அல்லது தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்குள் உணவருந்த சான்றிதழ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது