சுவிட்சர்லாந்தில் நிலச்சரிவு: காணாமல் போன 3 பேர்! மீட்பு பணிகள் தீவிரம்
சுவிட்சர்லாந்தின் தென்கிழக்குப் பகுதியில் பெரும் மின்னல் மற்றும் மழைப்பொழிவு காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தன.
ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மிசோக்ஸ் பள்ளத்தாக்கில் நிலச்சரிவில் சிக்கி ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன மற்ற மூவருக்கான மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
லோஸ்டல்லோ(Lostallo) நகராட்சியில் உள்ள வீடுகளின் குழுவை பாறை சரிவு தாக்கியது.
மீட்புக்குழுவினர் அகழ்வாராய்ச்சி கருவிகளையும், சிறப்பாகப் பயிற்சி பெற்ற தேடுதல் நாய்களையும் கொண்டு சனிக்கிழமை முழுவதும் தேடி வருகின்றனர்.
மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் சுவிஸ் காவல்துறையின் வில்லியம் குளோட்டர், காணாமல் போன மூன்று பேர்களையும் உயிருடன் கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கை இருப்பதாக உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |