ஊழல் குறைந்த நாடாக சுவிட்சர்லாந்துக்கு 3-வது இடம்!
இந்த வாரம் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) சமீபத்திய 2021 ஊழல் புலனாய்வு குறியீட்டை (Corruption Perception Index) வெளியிட்டது.
0 முதல் 100 (அதிக ஊழலுக்கு ஏற்ப மதிப்பெண்கள் குறையும்) வரையிலான மதிப்பெண்களுடன், பொதுத்துறை ஊழலின் உணரப்பட்ட நிலைகளின் மூலம் உலகில் உள்ள 180 நாடுகள் மற்றும் பிரதேசங்களை இந்த குறியீடு தரவரிசைப்படுத்துகிறது.
அதன்படி, உலக நாடுகளில், மிகக் குறைந்த ஊழல் நாடாக முதலிடத்தில் 100-க்கு 88 மதிப்பெண்களுடன் டென்மார்க் மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரண்டு நாடுகள் இடம்பிடித்துள்ளன.
அதனைத் தொடர்ந்து, 85 மதிப்பெண்களுடன் சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், அதே 85 மதிப்பெண்களுடன் ஸ்வீடன், சிங்கப்பூர், பின்லாந்து ஆகிய நாடுகளும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன.
அதனைத் தொடர்ந்து நோர்வே, நெதர்லாந்து, ஜேர்மனி, லக்ஸம்பர்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
பின்தொடர்ந்து, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, ஹோங்ஹோங் ஆகிய நான்கு நாடுகளும் 77 மதிப்பெண்களுடன் 11-வது இடத்தை பிடித்துள்ளன.
அதேபோல், இலங்கை 38 மதிப்பெண்களுடன் 94-வது இடத்திலும், இந்தியா 40 மதிப்பெண்களுடன் 86-வது இடத்திலும் உள்ளன.
உலக அளவில் ஊழல் அளவுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன என்பதை இந்த ஆண்டுக் குறியீடு வெளிப்படுத்துகிறது, தொடர்ந்து பத்தாவது ஆண்டாக உலகளாவிய சராசரி மாறாமல் உள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஸ்கோர் 2021-ல் 100க்கு 85ல் இருந்து ஒரு புள்ளி சரிந்து 84 மதிப்பெண்களை பெற்றுள்ளது. இருப்பினும் முதல் முதல் 10 நாடுகளில் ஒரு நாடாக இருந்து வருகிறது.
அதேபோல் மிக மோசமாக உழலால் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்த பட்டியலில் தெற்கு சூடான் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
அதற்கு முன் சோமாலியா, சிரியா, வெனிஸுலா, ஏமன் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.