சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கஞ்சா பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி!
சுவிட்சர்லாந்து அரசு மருத்துவ கஞ்சாவை (Medical Cannabis) விற்க, பயன்படுத்த மற்றும் ஏற்றுமதியை சட்டபூர்வமாக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஆகஸ்ட் 1 முதல், நோயாளிகள் மருத்துவ பரிந்துரை மூலம் மருத்துவ கஞ்சாவை மருந்து கடைகளில் பெறமுடியும். இதன்மூலம், மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கிய மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் சுவிட்சர்லாந்து சேர உள்ளது.
இந்த புதிய சட்டத்திற்கு முன், மருத்துவ கஞ்சா நோயாளிகள் பொது சுகாதாரத்திற்கான பொது சுகாதார மையமான ஃபெடரல் ஆபிஸ் ஆஃப் பப்ளிக் ஹெல்திற்கு (FOPH) கோரிக்கையை கோர வேண்டியிருந்தது.
மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான சுவிஸ் கண்காணிப்பு ஆணையமான ஸ்விஸ்மெடிக்கிடம் இருந்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வணிக நோக்கங்களுக்காக மருத்துவ கஞ்சாவை ஏற்றுமதி செய்யவும் இந்த சட்டம் அனுமதிக்கிறது.
நாட்டில் மருத்துவ கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்காக, சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் கவுன்சில் (சுவிஸ் கூட்டமைப்பின் கூட்டாட்சி அரசாங்கத்தின் நிர்வாகக் கிளை) மார்ச் 2021-ல் பாராளுமன்றம் அங்கீகரித்த சுவிஸ் போதைப்பொருள் சட்டத்தை திருத்துவதன் மூலம் மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா மீதான தடையை நீக்கியது.