சுவிஸ்சர்லாந்து லுட்சேர்ன் மாநில துர்க்கை அம்மனுக்கு 1008 சங்காபிஷேகம்
சுவிஸ்சர்லாந்து லுட்சேர்ன் மாநில துர்க்கை அம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் நடந்து முடிந்துள்ளது.
சுந்தரமாய், அழகின் சூட்சுமமாய், சுவர்ண பூமியென போற்றப்படும் சுவிஸ்சர்லாந்தில் லுட்சேர்ன் மாநிலத்திலுள்ள றூத் என்னும் பதியில் அமர்ந்திருத்து.
அரசாளும் மங்கல ரூபினி சிறீதேவி துர்க்கை அம்மனுக்கு 1008 சங்குகளால் நடாத்தபடும் சங்காபிஷேகம் 05.04.2023 புதன்கிழமை அன்று மிக சிறப்பாக நிகழ்ந்தேறியிருந்தது. அடியார்கள் ஆசார சீலர்களாக வ௫கை தந்து அம்பாளின் தி௫வ௫ளைப்பெற்றிருந்தனர்.
மிகவும் பக்தி பூர்வமாக ஆலயத்தொன்டர்களாலும் ஆலயநிர்வாகத்தினராலும் நீண்டகலத்திட்டமிடலால் அடியவர்களின் பொது உபயமாக வெகுவிமர்சையாக நிகழ்தேயியது அவளருளால் மட்டுமே நிகழ்தேறியது எனலாம்.
யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய சங்குகளில் சிவாச்சாரியார்கள் சிவசிறி சிவசண்முகநாதக்குருக்களின் ஏற்பாட்டில் சிவசிறி பேரானந்த துளதீஸ்வரக்குருக்கள தலைமையில் சிவசிறி அகத்தீஸ்வரக்குருக்களின் வேத மந்திரங்கள் முழங்க லுட்சேர்ன் புண்ணியமூர்த்தி கலைச்செல்வனின் மேளத்தாளத்துடன் அடியவர்களின் தேவார பஜனைகளுடன் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வலம் வந்து. பின்னர் துர்க்கை அம்மன் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர், சிவலிங்கம், சிவன் பார்வதி, முருகன், அம்பாள் ,விஷ்ணு, சண்முகன் ,வைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் ஆகிய பரிகார மூர்த்திகளுக்கும் பல்வேறு வண்ண வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் வீதி உலா புறப்பாடு அடியவர்களுக்கு அருளாசிவளங்கினாள் எங்கள் மங்கல ரூபினி சிறீதேவி துர்க்கை அம்பாள். ஆசார சீலர்களாக வ௫கை தந்த அடியவர்களுக்கு விபூதி பிரசாதங்கள் மற்று அன்னதான நிகழ்வுடன் 1008 சங்காபிஷேகம் சிறப்புடன் நிகழ்வுற்றது.
இரண்டு மாதங்களுக்கு மேலாக சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்ட தொண்டர்களுக்கும் உபயகார்ர்களின் ஒத்துழைப்புடன் சகலரையும் ஒருங்கமைத்த அடியவர்களுக்கும் அவர்களுக்கும் சகல உதவிகளையும் வழங்கிய ஆலய நிர்வாகத்தினருக்கும் நன்றிகள்.
“வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.” சுபம்.