இஸ்ரேலிலிருக்கும் சுவிஸ் குடிமக்களுக்காக சுவிட்சர்லாந்து எடுத்துவரும் நடவடிக்கை
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு வாழும் தங்கள் குடிமக்களை சொந்த நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை சில நாடுகள் துவங்கியுள்ளன.
இஸ்ரேலிலிருக்கும் சுவிஸ் குடிமக்களுக்காக சுவிட்சர்லாந்து எடுத்துவரும் நடவடிக்கை
இஸ்ரேலிலிருக்கும் சுவிஸ் குடிமக்களை சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வருவதற்காக செவ்வாயன்று ஒரு சுவிஸ் விமானம் இஸ்ரேல் சென்றது.
இஸ்ரேலிலிருந்து சுவிட்சர்லாந்து திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், சிறிது நேரத்திற்குள்ளாகவே விமானத்தின் இருக்கைகள் நிரம்பிவிட்டன.
மீண்டும் ஒரு விமானம்
இந்நிலையில், இன்று மீண்டும் ஒரு விமானம் இஸ்ரேல் சென்று சுவிஸ் குடிமக்களை அழைத்துவருகிறது. அந்த விமானத்தில் 215 இருக்கைகள் உள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று காலை, 11.55க்கு சூரிச்சிலிருந்து இஸ்ரேல் புறப்பட்ட அந்த விமானம், இன்று இரவு 9.25மணிக்கு டெல் அவிவ்விலிருந்து சுவிட்சர்லாந்துக்கு புறப்பட உள்ளது.
அந்த விமானம் இஸ்ரேலிலிருக்கும் சுவிஸ் குடிமக்களுக்காக மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |