அதிக வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க விரும்பும் சில சுவிஸ் மாகாணங்கள்: ஒரு மகிழ்ச்சிகரமான தகவல்
சுவிஸ் குடியுரிமை பெறுவது எளிதான விடயம் அல்ல என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
ஆனாலும், சில சுவிஸ் மாகாணங்கள் மற்றும் நகராட்சிகள், மற்ற மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளைவிட அதிக வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க, அதிகம் விரும்புவதாக ஒரு மகிழ்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
சில சுவிஸ் மாகாணங்கள் மற்றும் நகராட்சிகள், மற்ற மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளைவிட அதிக வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க, அதிகம் விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸ் குடியுரிமை பெறுவது எளிதான விடயம் அல்ல என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு, பெடரல் மட்டத்தில், ஒருவர் எவ்வளவு காலமாக சுவிட்சர்லாந்தில் வாழ்கிறார், அவரது மொழித்திறன் எந்த அளவில் உள்ளது, அவர் எந்த அளவுக்கு சுவிஸ் மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்கிறார் என்பதுபோன்ற பல தகுதித்தேவைகள் உள்ளன.
நகராட்சி மற்றும் உள்ளூர் மட்டத்திலோ, சீஸ், உள்ளூர் உயிரியல் பூங்கா போன்ற விடயங்கள் குறித்து போதுமான அளவுக்கு தெரிந்து வைத்திராத வெளிநாட்டவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை வழங்க மறுப்பு தெரிவிக்கப்படுவது குறித்த செய்திகளும் உண்டு.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் சுவிஸ் மாகாணங்கள் மற்றும் நகராட்சி மட்டத்தில் எவ்வளவு வெளிநாட்டவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கப்பட்டது என்பது குறித்து Neuchâtel பல்கலையிலுள்ள National Center of Competence in Research (NCCR) என்ற அமைப்பிலுள்ள ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்கள்.
அந்த ஆய்வின் முடிவுகள் 2020ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட குடியுரிமையின் அடிப்படையிலானவை என்றாலும், இன்றைய நிலையும் அதேபோல்தான் உள்ளதாக கருதப்படுகிறது.
அந்த ஆய்வில், சுவிஸ் குடியுரிமை வழங்கும் வீதம் 1.6 சதவிகிதமாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். அதாவது, சுவிட்சர்லாந்தில் நிரந்தரமாக வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள் 100 பேரில் 1 அல்லது 2 பேர் அந்த ஆண்டில் குடியுரிமை பெற்றிருக்கிறார்கள்.
மாகாண வாரியாக பார்க்கும்போது, சூரிச், Appenzell Ausserrhoden மற்றும் ஜூரா ஆகிய மாகாணங்களும், நகராட்சி மட்டத்தில் பார்க்கும்போது சூரிச், ஜெனீவா, பேசல் மற்றும் லாசேனும் அதிக அளவில் குடியுரிமை வழங்கியுள்ளன, அல்லது, எளிதில் குடியுரிமை பெறும் வகையிலான சட்டங்களைக் கொண்டுள்ளன எனலாம்.
அதே நேரத்தில் Aargau, Schwyz மற்றும் Graubünden ஆகிய மாகாணங்கள் கடுமையான சட்டங்களைக் கொண்டுள்ளன.
இந்த தகவல் ஒரு குறிப்பிட்ட ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையிலானது மட்டுமே என்பதை நினைவில் கொள்வது நல்லது.