சுவிட்சர்லாந்துக்கு 110,000 பணியாளர்கள் தேவை: புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படுவார்களா?
சுவிட்சர்லாந்தில், 2023ஆம் ஆண்டின் இறுதியில் 110,000 பணியிடங்கள் காலியாக இருந்ததாக பெடரல் புள்ளியியல் அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் அதிகரிக்கலாம்
உலக நாடுகள் பலவற்றைப்போலவே, சுவிட்சர்லாந்திலும் பணி ஓய்வு பெற இருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அந்த இடத்தை நிரப்பும் அளவில் போதுமான இளைஞர்கள் இல்லை.
ஆக, 2035வாக்கில் சுவிட்சர்லாந்துக்கு 1.2 மில்லியன் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும், 2040 வாக்கில், பணியாளர் பற்றாக்குறை 430,000ஆக உயரும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
Keystone/Mauro Fermariello/Science Photo Library
புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படுவார்களா?
இவ்வளவு பெரிய அளவில் சுவிட்சர்லாந்தில் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிந்தும், புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் திட்டம் எதுவும் சுவிட்சர்லாந்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
அதற்கு பதிலாக, படித்துவிட்டு, வீட்டில் குழந்தைகளை கவனித்துக்கொண்டிருக்கும் தாய்மாரை வேலைக்கு வரவழைக்கமுடியுமா, அவர்களுடைய பிள்ளைகளை பகல் நேரக் காப்பகங்களில் விட, அரசுக்கு என்ன செலவாகும் என்றுதான் சுவிட்சர்லாந்து யோசித்துக்கொண்டிருக்கிறது.
இன்னொருபக்கம், மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தலாமா, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாமா என்ற எண்ணம்தான் அங்கு காணப்படுகிறது.
விடயம் என்னவென்றால், வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் செவிலியர்கள், உதவியாளர்கள் போன்றவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் அதிக அளவில் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், முதியவர்களையும், நோயாளிகளையும் கவனித்துக்கொள்ள இயந்திரங்களை வேலைக்கு வைக்கமுடியுமா என்ன?
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |