சுவிட்சர்லாந்துக்கு சுமார் 40,000 ஆசிரியர்கள் தேவை: வெளிநாட்டவர்களுக்கும் வாய்ப்பு...
சுவிட்சர்லாந்துக்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு சுமார் 40,000 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.
வெளிநாட்டவர்களுக்கும் வேலைவாய்ப்பளிக்க சுவிஸ் அரசு திட்டமிட்டு வருகிறது.
பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளில், அடுத்த பத்தாண்டுகளில் சுவிட்சர்லாந்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என தெரியவந்துள்ளது.
பிரைமரி பள்ளிகளுக்கு மட்டுமே சுமார் 43,000 முதல் 47,000 ஆசிரியர்கள் வரை தேவைப்படுகிறார்கள். ஆனால், 2022 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் 34,000 பேர் மட்டுமே ஆசிரியர் பயிற்சியை முடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே மீதமுள்ள எண்ணிக்கையை வெளிநாட்டவர்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவ மாணவிகள் முதலானவர்களைக் கொண்டு நிரப்பலாம் என புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.