சுவிஸில் கோவிட் நடவடிக்கை விரிவாக்கம்: தரவுகளுக்காக காத்திருக்கும் அதிகாரிகள்!
சுவிட்சர்லாந்தில் கோவிட் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து முடிவெடுக்க சுவிஸ் அதிகாரிகள் புதன்கிழமை வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில், ஃபெடரல் கவுன்சில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதை தற்போதைக்கு தவிர்த்துள்ளது.
Omicron மாறுபாட்டின் அபாயங்கள் குறித்து போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும், குறிப்பாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவது குறித்த தரவுகள் கிடைக்காததால், கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பதை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளது.
இருப்பினும், "அடுத்த சில நாட்கள் முக்கியமானவை" என்று மாநில சுகாதார இயக்குநர்கள் மாநாட்டின் தலைவர் லூகாஸ் ஏங்கல்பெர்கர் (Lukas Engelberger) கூறினார்.
லூகாஸ் ஏங்கல்பெர்கர் சுவிட்சர்லாந்தின் Sonntagszeitung செய்தித்தாளிடம் கூறுகையில், கூட்டாட்சி அதிகாரிகள் முடிவெடுக்க அனுமதிக்கும் புதிய தரவு புதன்கிழமைக்குள் கிடைக்கும் என்று கூறினார்.
"அதற்குள் தீவிர சிகிச்சை பிரிவுகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தால், பெடரல் கவுன்சில் அடுத்த வார தொடக்கத்தில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்க்க முடியாது அல்லது குறைந்தபட்சம் அவற்றை ஆலோசனைக்காக மண்டலங்களுக்குச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்க முடியாது" என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், Omicron அலைக்கு பொருத்தமான நடவடிக்கைகள் எங்களிடம் உள்ளன.
மேலும் இறுக்கம் தேவைப்பட்டால், 2G அல்லது 2G Plus விதிமுறைகள் கொடுவரப்படலாம்" என்றார்.
சுவிட்சர்லாந்தில் தற்போது உள்ள நடவடிக்கைகள் என்ன?
சில மாநிலங்கள் பள்ளிகளில் முகக்கவசம் குறித்த பல்வேறு விதிகள் உட்பட தங்கள் சொந்த விதிமுறைகளை வைத்துள்ளன.
அதேசமயம், மற்ற சில மாநிலங்கள் திங்கள் முதல் தங்கள் தனிமைப்படுத்தல் நாட்களை குறைக்க முடிவு செய்தன.
இருப்பினும், மிகவும் கடுமையான நடவடிக்கைகள் கூட்டாட்சி மட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளன, இதில் உணவகங்களுக்கான நாடு தழுவிய 2G விதியும், தனியார் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கான வரம்புகளும் அடங்கும்.