ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்ல, இந்த 3 நாடுகளுக்கும் தடை! சுவிஸ் அரசு அதிரடி
உலகை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக, தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு மட்டுமின்றி மேலும் 3 நாடுகளுக்கு சுவிஸ் அரசாங்கம் தடை அறிவித்துள்ளது.
இஸ்ரேல், பெல்ஜியம், ஹாங்காங் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நாட்டிற்குள் நுழைய விரும்பும் எவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஷெங்கன் பகுதியில் சுவிஸ் குடியுரிமை (Swiss citizenship) அல்லது குடியிருப்பு அனுமதி (residency permit) பெற்றிருக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
அப்படி அவர்கள் வந்தாலும், கோவிட் நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் அடுத்த 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையானது, தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தொற்றிலிருந்து மீண்ட நபர்களுக்கும் இது பொருந்தும் என்று சுவிட்சர்லாந்தின் பொது சுகாதாரத்திற்கான கூட்டாட்சி அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது.
ஐரோப்பிய கடவுச்சீட்டு (EU Passport) இல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், இஸ்ரேலியர்கள் நாட்டிற்கு வருவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த முதல் நாடாக சுவிட்சர்லாந்து மாறியது.
இஸ்ரேலில் ஒருவர் இந்த Omicron வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தொற்று அதிகமாக பரவக்கூடும் என்ற அச்சத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களாக தென்னாப்பிரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு வந்துள்ள அனைவரையும் தொடர்பு கொண்டு, SARS-CoV-2 வைரஸ் கண்டறியப்பட்டால், PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.