சுவிட்சர்லாந்தில் நவம்பர் 1 முதல் அமுலுக்கு வரும் புதிய விதிகள்
Switzerland new rules effective from November 1: சுவிட்சர்லாந்தில் நவம்பர் 1 முதல் புதிய விதிகள் அமுலுக்கு வரகின்றன.
சுவிட்சர்லாந்தில் புதிய விதிகள் அமுல்
சுவிட்சர்லாந்தில் நவம்பர் 1 முதல் பல புதிய விதிகள் நடைமுறைக்கு வருகிறது. விமானப் பயணிகள் தரவு சேகரிப்பு, ஷெங்கன் தகவல் பரிமாற்றம், அடையாள ஆவணங்கள் மற்றும் கால்நடை நோய் கட்டுப்பாடு தொடர்பான விதிகள் இதில் அடங்கும்.

விமானப் பயணிகள் தரவு
இனி விமான நிறுவனங்கள், பயணிகள் பற்றிய விரிவான தகவல்களை Passenger Information Unit (PIU) எனப்படும் தேசிய அதிகாரத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கை, பயங்கரவாதம் மற்றும் பெரிய குற்றங்களை தடுக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள், டிக்கெட் முன்பதிவு செய்யும் முன், அவர்களின் தரவு சேகரிக்கப்படுவதை அறியப்படுத்தப்படுவார்கள்.
ஷென்கன் தகவல் பரிமாற்றம்
சுவிட்சர்லாந்து, Schengen Information System-இன் (SIS) தேசிய பிரிவை மேம்படுத்துகிறது. SIRENE Bureau எனப்படும் மையம், சர்வதேச பொலிஸ் ஒத்துழைப்புக்கான தரவு பரிமாற்றத்தை ஒருங்கிணைக்கும். இதன் மூலம் எல்லை பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்.
அடையாள ஆவணங்கள்
இனி “provisional passport” என்பதற்கு பதிலாக “emergency passport” என அழைக்கப்படும். அடையாள அட்டைகள் chip உடன் ஒன்றும் மற்றும் chip இன்றி ஒன்றும் என இரண்டு வகைகளில் வழங்கப்படும். பாஸ்போர்ட் மற்றும் chip கொண்ட அடையாள அட்டைகளுக்கு biometric data (fingerprints) சேகரிப்பு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கட்டணங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை:
கால்நடை பண்ணைகளில் Bovine Viral Diarrhoea (BVD) நோய் கட்டுப்பாட்டுக்கான புதிய விதிகள் அமுலுக்கு வருகிறது. இனி பண்ணைகள் “BVD-free” அல்லது “not BVD-free” என இரண்டு வகைகளில் மட்டுமே வகைப்படுத்தப்படும். 99 சதவீத பண்ணைகள் ஏற்கனவே BVD-இல் இருந்து விடுபட்டுள்ளன.
இந்த மாற்றங்கள், சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பு, அடையாள ஆவணங்கள் மற்றும் வேளாண்மை துறைகளில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |