அதிக ஆபத்துள்ள நபர்களுக்கு கூட COVID தடுப்பூசியை பரிந்துரைக்காத சுவிட்சர்லாந்து!
சுவிட்சர்லாந்து அரசு தனது குடிமக்களுக்கு, வசந்த கால மற்றும் கோடை காலங்களில், வைரஸால் கடுமையான நோயை அனுபவிக்கும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கும் கூட, கோவிட்-19 தடுப்பூசியை பரிந்துரைக்காது.
சுவிஸ் ஃபெடரல் ஆபிஸ் ஆஃப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்ட வழிகாட்டுதல்
கோவிட்-19 தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் ஷாட்கள் தொடர்பாக சுவிஸ் ஃபெடரல் ஆபிஸ் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (FOPH) நேரடியாக வெளியிட்ட சமீபத்திய பரிந்துரையில், இந்த கட்டத்தில் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, அல்லது தோற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்" என்று அறிவித்தது.
எனவே அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு எதோ ஒருவக்ககையில் கொரோனா வைரஸுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று FOPH அதன் வழிகாட்டுதலில் வலியுறுத்தியது. "2023 வசந்த/கோடை காலத்தில், வைரஸ் குறைவாக புழக்கத்தில் இருக்கும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Getty Images
மேலும், COVID-19 வைரஸின் தற்போதைய வகை "மிகவும் லேசான நோயை ஏற்படுத்துகின்றன" என்றும் FOPH குறிப்பிட்டது. ஆனால் தொற்றுநோய் அதிகமாக பரவினால், தடுப்பூசிக்கு பரிந்துரைக்கப்படும் என்று FOPH சுட்டிக்காட்டியது.
கூடுதலாக, சுவிஸ் FOPH தனது COVID-19 தடுப்பூசி பரிந்துரைகளை இந்த ஆண்டின் பிற்பகுதியில் மறுமதிப்பீடு செய்து, தேவைக்கேற்ப புதுப்பிக்கப்படும் என்று கூறியது.
அதிக ஆபத்தில் உள்ள நபர்கள்
அதேநேரம், COVID-19 வைரஸால் கடுமையான நோயை அனுபவிக்கும் அதிக ஆபத்தில் உள்ள நபர்கள் தங்கள் மருத்துவரிடம் தனிப்பட்ட ஆலோசனையைப் பெற்று தடுப்பூசியைப் பெறலாம், அதற்காக, அதிக ஆபத்தில் உள்ள நபர்கள் எல்லோரும் தடுப்பூசி போடவேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்திள்ளது.
Reuters
மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு, ஒரு நோயாளி தடுப்பூசி போடுவதற்கு பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், அந்த நோயாளி விருப்பப்பட்டால் அவரால் தடுப்பூசி பெற முடியும், ஆனால் அவர்களே செலவை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.