உக்ரைனுக்கு ராணுவத்தை அனுப்ப நாங்களும் தயார்: நடுநிலைமை நாடொன்று அறிவிப்பு
உக்ரைனில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக சில ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ வீரர்களை அனுப்ப திட்டமிட்டுவரும் நிலையில், சுவிட்சர்லாந்தும் ராணுவ வீரர்களை அனுப்ப திட்டமிட்டுவருகிறது.
உக்ரைனுக்கு ராணுவ வீரர்கள்
சுவிஸ் ராணுவத் தளபதியான Thomas Süssli இது குறித்து பேசும்போது, உக்ரைனில் அமைதி இன்னமும் ஏற்படவில்லை, அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பிடமிருந்து இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை.
என்றாலும், கோரிக்கை விடுக்கப்படும் நிலையில், சுவிஸ் அரசும் நாடாளுமன்றமும் சம்மதித்தால், சுவிட்சர்லாந்து, 9 முதல் 12 மாதங்களில் சுமார் 200 ராணுவ வீரர்களை அனுப்பக்கூடும் என தெரிவித்தார்.
நடுநிலை நாடாக இருந்தாலும், உலகம் முழுவதும் அமைதியை நிலைநிறுத்தும் பல்வேறு மிஷன்களில் சுவிட்சர்லாந்தும் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |