அகதிகளைத் திருப்பி அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டம்
உக்ரைன் அகதிகளை திருப்பி அனுப்ப சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் அகதிகளுக்காக சிறப்பு அகதிகள் நிலை
2022ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 12ஆம் திகதி, உக்ரைன் ரஷ்யப் போருக்குத் தப்பி சுவிட்சர்லாந்துக்கு வந்த உக்ரைன் நாட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில், ’S status’ என்னும் சிறப்பு அகதிகள் நிலையை நடைமுறைக்குக் கொண்டுவந்தது சுவிட்சர்லாந்து அரசு.
Gerogetown journal & international affairs
ஆனால், அது உக்ரைன் நாட்டவர்கள் நீண்ட காலம் சுவிட்சர்லாந்தில் தங்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் அல்ல.
அகதிகளைத் திருப்பி அனுப்ப திட்டம்
உலக நாடுகள் பல, ரஷ்யா உட்பட, போர் விரைவில் முடிந்துவிடும் என்றே நம்பின. ஆனால், இப்போதிருக்கும் சுழலில், உக்ரைன் போர் எப்போது முடியும் என்பதை யாராலும் கணிக்கமுடியாத ஒரு நிலைமையே உள்ளது.
திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று நம்பியே உக்ரைன் அகதிகளை சுவிட்சர்லாந்துக்குள் அனுமதித்த சுவிஸ் அரசு, இப்போது அவர்களை எப்போது திருப்பி அனுப்ப இயலும் என்பது குறித்து யோசிக்கத் துவங்கியுள்ளது.
picture-alliance/AP
ஆக, ’S status’ என்னும் சிறப்பு அகதிகள் நிலையை அமுல்படுத்தியதை, திரும்பப் பெறுவதற்கு சுவிஸ் அரசாங்கம் திட்டமிடத் துவங்கியுள்ளது.
தற்போது, சுவிட்சர்லாந்தில் 65,650 உக்ரைன் நாட்டவர்கள் ’S status’ என்னும் சிறப்பு நிலையை அனுபவித்து வரும் நிலையில், 16,869 பேருடைய சிறப்பு நிலை காலாவதியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |