கலவரத்துக்கு தயாராகும் சுவிட்சர்லாந்து... உஷார் நிலையில் பொலிஸ்: பின்னணி
சுவிட்சர்லாந்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை, கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான வாக்கெடுப்புகள் நடைபெற உள்ளன.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டத்தினருக்கு சாதகமான முடிவுகள் வாக்கெடுப்பில் கிடைக்காவிட்டால், நாடு முழுவதும் நாளை வன்முறை வெடிக்கும் என்பதால், அதிகாரிகள் கவலையடைந்துள்ளார்கள்.
கடந்த சில வாரங்களாகவே, நாட்டில் மக்களின் மன நிலைமை, குறிப்பாக கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்ப்பவர்களின் மன நிலைமை பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஏற்கனவே, அண்டை நாடுகளான ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளன. சுவிட்சர்லாந்திலும் செப்டம்பரில் பெடரல் மாளிகை தாக்குதலுக்குள்ளானது.
சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset உட்பட பல அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Bern பாதுகாப்புத்துறை இயக்குநரான Reto Nause, நகரம், மோசமான நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராகிவருகிறது என்றார்.
நாங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறோம், அதே நேரத்தில் கவலைக்குள்ளாகியிருக்கிறோம், காரணம், கொரோனா சட்டத்தை எதிர்ப்போர் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் பிரச்சினைதானே என்கிறார் அவர். இத்ற்கிடையில், சமீபத்தைய கருத்துக்கணிப்புகளும் கொரோனா சட்டத்தை எதிர்ப்பவர்கள் பெரும்பான்மையானோரால் தோற்கடிக்கப்படுவார்கள் என்றே கூறியுள்ளன.
இந்நிலையில், Bern பொலிசார், தாங்கள் வன்முறை போராட்டங்களை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
தேர்தல் என்பது உணர்ச்சிப்பூர்வமான ஒரு விடயம் என்பதை அறிவோம் என்று கூறியுள்ள பொலிஸ் செய்தித்தொடர்பாளரான Patrick Jean, தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும், அதற்கேற்ற மாதிரி பின்விளைவுகள் இருக்கும் என்கிறார்.
அதன் அடிப்படையில், சட்டம் ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதிச் செய்யும் வகையில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்கிறார் அவர்.