போர் வந்தால் என்ன செய்வது? சுவிட்சர்லாந்து தயார் செய்யும் கையேடு
பிரான்ஸ் அரசு, போர், சுகாதார நெருக்கடி அல்லது இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டால், அதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வது எப்படி என்பதை மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக ‘உயிர் பிழைக்க உதவும்’ கையேடு ஒன்றைத் தயாரித்து வருவதாக ரகசிய தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
தற்போது, சுவிட்சர்லாந்தும் அதேபோல ஒரு கையேட்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்து தயார் செய்யும் கையேடு
ஐரோப்பாவில் நிலவிவரும் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, போர் வந்தால் அதை எதிர்கொள்வதற்கு பொதுமக்கள் செய்யவேண்டியது என்ன என்பதை விளக்கும் நடைமுறை கையேடு ஒன்றை உருவாக்க சுவிஸ் அதிகாரிகள் திட்டமிட்டுவருகிறார்கள்.
ஸ்வீடனின் முன்மாதிரியைப் பின்பற்றி, ராணுவ விவகாரங்கள் தொடர்பிலான சர்வதேச மாநாடு, ஐந்து பக்கங்கள் கொண்ட ஒரு கையேட்டை வடிவமைத்துள்ளது.
அதன் பெயர், ’Behaviour in Crisis and War, என்பதாகும். அவசரத் தேவைக்கு என்னென்ன பொருட்களை சேகரிப்பது, வெளியேறத் தயாராக இருப்பது மற்றும் செல்லப்பிராணிகளை பாதுகாப்பது எப்படி என்பது முதலான தகவல்கள் கூட அந்த கையேட்டில் இடம்பெற்றுள்ளனவாம்.
சூட்கேஸ்களுக்கு பதிலாக முதுகுப்பைகள், பேட்டரியால் இயங்கும் ரேடியோ போன்ற பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ள அந்த கையேடு அறிவுறுத்துகிறது.
மேலும், போர் தொடர்பிலான தவறான தகவல்களுக்கு எதிராகவும் அது எச்சரிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |