சுவிஸில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விதி முன்மொழிவு!
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான திருத்தச் சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பணியமர்த்தப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய விதிகளை விதிக்கும் முன்மொழிவு பாராளுமன்றத்தில் ஓரளவு ஆதரவைப் பெற்றுள்ளது.
சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான தேசிய கவுன்சில் (National Council), வெளிநாட்டு தொழிலாளர்கள் சுவிஸ் சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச தரத்தைப் பெற வேண்டும் என்பதற்ககாக ஊதிய விதிகளுக்கு ஒரு திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.
தற்போது, ஒரு சில மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத் தரநிலைகள் சுவிட்சர்லாந்தில் பணியமர்த்தப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பொருந்தாது, இது சுவிஸ் நிறுவனங்களுக்கு பாதகமாக உள்ளது என்று சீர்திருத்தத்தை ஆதரிப்பவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த நிலையில், இந்த விதி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தேசிய கவுன்சிலில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
இப்போது சட்டத்தை அங்கீகரிப்பது மாநில கவுன்சில் (Council of States), சுவிட்சர்லாந்தின் செனட் பொறுப்பில் உள்ளது.
செனட் இந்த முன்மொழிவை வரும் வாரங்களில் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.