சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் புதிய தனிமைப்படுத்தல் விதிமுறை!
Omicron வைரஸ் பரவிவரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் தனிமைப்படுத்தல் காலத்தை ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான நாடுகள் தங்கள் கொரோனா விதிமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்திவருகின்றன.
அந்த வகையில், இப்போது சுவிட்சர்லாந்து அரசும் அதன் கொரோனா தனிமைப்படுத்தல் காலத்தை 10 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைக்கவுள்ளது.
5 நாட்களாக குறைக்கப்பட்டப் பிறகு, தனிமைப்படுத்தலை முடிக்கும் எவரும் 48 மணிநேரங்களுக்கு அறிகுறி இல்லாமல் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல் கடந்த 4 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தடுப்பூசியைப் பெற்றவர்கள் தொடர்புத் தனிமைப்படுத்தலுக்குச் செல்ல வேண்டியதில்லை.
இந்த நடவடிக்கைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
Omicron காரணமாக நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதாலும் மற்றும் தொழிலாளர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்ட விடுப்பு (Sick Leave) எடுப்பது அல்லது தனிமைப்படுத்தப்படுவதாலும் பல நாடுகள் தனிமைப்படுத்தலுக்கான கால இடைவெளியைக் குறைத்து வருகின்றன.
இதுவரை, Omicron வைரஸால் குறைவான அறிகுறிகள் மற்றும் குறைந்த இறப்பு விகிதங்களே பதிவுசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இருப்பினும் தொற்று எண்ணிக்கை சுகாதார-பராமரிப்பு உள்கட்டமைப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
சுவிட்சர்லாந்து, பல நாடுகளைப் போலவே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிகப்படியான தொற்று பாதிப்புகளை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், அதிகப்படியான மருத்துவமனை அனுமதிப்புகளை தவிர்க்க முற்படுவதால், தற்போதைய கட்டுப்பாடுகளை மார்ச் இறுதி வரை நீட்டிப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.