சுவிட்சர்லாந்தில் இந்திய தடுப்பூசிக்கு அங்கீகாரம்!
சுவிட்சர்லாந்து அரசாங்கம் இந்தியாவில் கோவிட்-19க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட Covaxin தடுப்பூசியை அதிகாரப்பூர்வாமாக அங்கீகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து பயணம் செய்வதற்கான சரியான தடுப்பூசியாக பாரத் பயோடெக்கின் கோவாக்சினை சுவிட்சர்லாந்து அரசு அங்கீகரித்துள்ளது.
இறுதியாக Covaxin தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அவசர அனுமதியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம், தூதரகம் மூலமாக அழுத்தத்தை முடுக்கிவிடுவதால், பல நாடுகள் படிப்படியாக Covaxin தடுப்பூசியை அங்கீகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, சுவிட்சர்லாந்தை தொடர்ந்து, பிரித்தானியாவில் இந்த கோவாக்சின் தடுப்பூசி அங்கீகரிக்கப்படுமென கூறப்படுகிது.
மேலும், கனடா, அமேரிக்கா உட்பட பல உலக நாடுகள் அடுத்தடுத்து கோவாக்சின் தடுப்பேசியை அங்கீகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.