பிரான்ஸ் நாட்டுக் கோடீஸ்வரருக்கு குடியுரிமை அளிக்க சுவிட்சர்லாந்து மறுப்பு: காரணம் என்ன தெரியுமா?
பிரான்ஸ் நாட்டுக் கோடீஸ்வரருக்கு குடியுரிமை வழங்க சுவிட்சர்லாந்து அரசு மறுத்துள்ள நிலையில், புலம்பெயர்தல் அதிகாரிகளின் முடிவு சரியானதே என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
40 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவரும் கோடீஸ்வரர்
பிரான்ஸ் நாட்டவரான கோடீஸ்வரர் ஒருவர், சுமார் 40 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவருகிறார். அவருக்கு சொந்தமாக ஆடம்பர ஹொட்டல்களும், கிளினிக்குகளும் உள்ளன.
ஆனால், அவரது குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு
குடியுரிமை கோரி அவர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்குக் காரணம், 2017ஆம் ஆண்டு, மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கவேண்டிய சாலையில், அவர் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்ததால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது, மறுமுறை குற்றம் செய்தால் சிறை செல்லும் வகையில் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பெடரல் நிர்வாக நீதிமன்றமும், குற்றப்பின்னணி கொண்ட ஒருவர் நாட்டுடன் ஒருங்கிணைந்து வாழ்ந்ததாக கூறமுடியாது என்று கூறி, புலம்பெயர்தல் அதிகாரிகளின் முடிவு சரியானதே என தீர்ப்பளித்துள்ளது.