சுவிட்சர்லாந்தில் சூடுபிடிக்குமா தடுப்பூசி விவாதம்! பொது வாக்கெடுப்பு எப்போது?
சுவிஸ் கூட்டாட்சி அவையானது கட்டாய தடுப்பூசிக்கு எதிரான முன்முயற்சியை நிராகரித்துள்ளது.
கூட்டாட்சி அவையின் நிலைப்பாடு
சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி அவையானது(Federal Council) "கட்டாய தடுப்பூசி நிறுத்து திட்டம்" என அழைக்கப்படும் முன்முயற்சியை நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக ஜூன் 9ம் திகதி, 2024 அன்று பொது வாக்கெடுப்புக்கு நடைபெற உள்ள நிலையில், அதில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று பெடரல் அவையானது கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் சுவிட்சர்லாந்தில் தற்போது கட்டாய தடுப்பூசி இல்லை என்றும், தற்போது உள்ள சட்டங்கள் ஏற்கனவே தனிநபர் உரிமைகளைப் பாதுகாக்கின்றன என்றும் கூட்டாட்சி அவையினர் வாதிடுகின்றனர்.
உலகெங்கிலும் தடுப்பூசி குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த பொது வாக்கெடுப்பு வந்துள்ளது.
இந்த வாக்கெடுப்பு சுவிட்சர்லாந்தில் தனிநபர் சுதந்திரங்கள் மற்றும் பொது சுகாதார பொறுப்புகள் குறித்த விவாதத்தை தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடல் மற்றும் மனநலம் தொடர்பான உரிமைகள் ஏற்கனவே சுவிட்சர்லாந்து அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Swiss Vaccination Initiative | Switzerland Compulsory Vaccination | Swiss Referendum Vaccination | Stop Compulsory Vaccination Switzerland | Swiss Federal Council Vaccination | Canton Vaccination Requirements Switzerland | Herd Immunity Switzerland | Vaccination Debate Switzerland | Swiss Public Health Measures | June 9 Switzerland Vote