சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் யோசனை நிராகரிப்பு
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 25 Franc நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் யோசனையை நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.
சுவிஸ் மக்கள் கட்சியின் (SVP) உறுப்பினர் தாமஸ் ஐஷி சமர்ப்பித்த இந்த யோசனை, அதிக அளவிலான சுற்றுலாவால் ஏற்படும் சிரமங்களை தடுக்கவும், அந்த வருவாயை ஓய்வூதிய நிதிக்கு வழங்கவும் முன்மொழியப்பட்டது.
ஆனால், இதைப் நடைமுறையில் செயல்படுத்துவது கடினம் மற்றும் செலவானதாக இருக்கும் என தேசிய சபை முடிவெடுத்தது.
மேலும், இது ஐரோப்பிய ஒன்றியத்துடன் (European Union) சுவிட்சர்லாந்து கையெழுத்திட்ட Free Movement of Persons ஒப்பந்தத்துக்கு எதிரானதாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.
மற்றொரு யோசனை
இதேபோன்ற மற்றொரு யோசனை இன்னும் விவாதத்திற்கு வராத நிலையில் உள்ளது.
அது என்னெவென்றால், சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் வரி விதிப்பது பற்றிய யோசனை ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Switzerland rejects 25 franc entry fee for foreign tourists, Switzerland tourism