சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்ல பிரித்தானியர்களுக்கு எப்போது அனுமதி: என்ன ஆவணங்கள் தேவை
இம்மாதம் (ஜூன்) 28 ஆம் திகதி முதல், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரித்தானியர்கள், அமெரிக்கர்கள் உட்பட மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளார்கள். அவர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை எனக்காட்டும் ஆவணத்தை சமர்ப்பிக்கவோ அல்லது தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவே வேண்டியதில்லை.
தடுப்பூசியால் கொரோனா சூழலில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக, சுற்றுலாப்பயணிகள் சுவிட்சர்லாந்துக்கு வருவது தொடர்பில், சுவிஸ் பெடரல் கவுன்சில் பல கட்டுப்பாடுகளை நெகிழ்த்த இருப்பதாக இம்மாதம் 11ஆம் திகதி அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள். என்றாலும், இது தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 23ஆம் திகதிதான் எடுக்கப்படும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தத் தவறவில்லை.
அதே நேரத்தில், சுவிட்சர்லாந்தில் இப்போது இருக்கும் அளவிலேயே கொரோனா தொற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை தொடரும் பட்சத்தில், அல்லது முன்னேற்றம் காணப்படும் பட்சத்தில், Schengen மண்டலத்துக்கு வெளியில் உள்ள நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள், அதாவது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், ஜூன் இறுதிக்கு முன்பே சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்படலாம்.
அதற்காக அவர்கள் செய்யவெண்டியது ஒரே விடயம்தான். தாங்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தை சமர்ப்பித்தால் போதும்! அந்த ஆவணம், உங்கள் ஸ்மார்ட்போனிலோ அல்லது காகித வடிவிலோ இருக்கலாம்.
அதில், உங்கள் பெயர், பிறந்த திகதி, தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் பெற்றுக்கொண்ட திகதிகள் (ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியானால் ஒரே திகதி) மற்றும் தடுப்பூசியின் பெயர் மற்றும் batch number ஆகியவை இருக்கவேண்டும். இன்னொரு முக்கிய விடயம், அந்த தடுப்பூசி ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்
.
பைசர், மொடெர்னா, ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய
நிறுவனங்களின் தயாரிப்பான தடுப்பூசிகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கபட்ட
தடுப்பூசிகள் ஆகும்.