பொது இடங்களில் புர்கா அணிந்தால் அபராதம்: சுவிட்சர்லாந்தின் சர்ச்சைக்குரிய சட்டம்
பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையில் உடை அணிபவர்களுக்குஅபராதம் விதிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது.
விமானம், தூதரகங்கள், மத சம்பந்தமான இடங்கள் ஆகியவற்றில் இந்த தடைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையில் உடை அணிபவர்களுக்கு 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு வலது சாரியினர் கொண்டு வந்த ‘புர்கா தடை’ என்னும் மசோதா குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த மசோதா புர்கா தடை என அழைக்கப்பட்டாலும், கால்பந்து போட்டி காண வந்த ஒருவர் முகத்தை மறைக்கும் வகையில் துணி கட்டுவதற்கும் சரி, பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் நிகாப் அணிவதற்கும் சரி, மொத்தத்தில் கண், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளை மறைக்கும் வகையில் உடை அணிய தடை என்பதே அதன் பொருளாகும்.
இந்த தடையை மீறுபவர்களுக்கு 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டு வருகிறது.
உண்மையில், 10,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. அது மிக அதிகம் என்பதால் தற்போது 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிகள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், பொதுப்போக்குவரத்து, உணவகங்கள், கடைகள், திரையரங்குகள் முதலான பல பொது இடங்களுக்கு இந்த தடை பொருந்தும்.
ஆனாலும், விமானம், தூதரகங்கள், மத சம்பந்தமான இடங்கள் ஆகியவற்றிற்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.