சுவிட்சர்லாந்தில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஊதிய உயர்வு: ஆனால்...
சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டில் 2.2 சதவிகிதம் அளவுக்கு ஊதிய உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஊதிய உயர்வு
சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டில் 2.2 சதவிகிதம் அளவுக்கு ஊதிய உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்படி ஊதியம் உயருமானால், கடந்த 15 ஆண்டுகளில் அதுதான் மிகப்பெரிய ஊதிய உயர்வாக இருக்கும்.
அத்துடன், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த உயர்வு இரண்டு மடங்கு அதிகமுமாகும்.
சமீபத்திய ஆய்வு ஒன்றில், 300 நிறுவனங்களிடம் அடுத்த ஆண்டுக்கான ஊதியம் குறித்த திட்டம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், ஆய்வின் முடிவுகள் இந்த தகவலைத் தெரிவிக்கின்றன.
ஊதியம் உயர்ந்தாலும் அது போதுமானதாக இருக்காது
இந்நிலையில், இந்த அளவுக்கு ஊதிய உயர்வு இருந்தாலும்கூட, சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் 3.5 சதவிகிதமாக இருப்பதால், இந்த ஊதிய உயர்வு விலைவாசி உயர்வை ஈடுகொடுக்கும் அளவுக்கு இருக்காது என்று கூறியுள்ளார் ஆய்வாளர்களில் ஒருவரான Daniel Kalt.
image - Pixabay