சுவிட்சர்லாந்தில் தற்கொலை இயந்திர பயன்பாட்டுக்கு சட்டப்பூர்வ அனுமதி!
சுவிட்சர்லாந்தில் 3D Printed தற்கொலை இயந்திர பயன்பாட்டுக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படவுள்ளது.
'Sarco' இயந்திரம் என அழைக்கப்படும் தற்கொலைக்கு பயன்படுத்தக்கூடிய 3D Printed Capsule-ஐ Exit International நிறுவனம் உருவாக்கியது.
சுவிட்சர்லாந்தில் இந்த இயந்திரத்தின் 'சட்டப்பூர்வ மதிப்பாய்வு நிறைவேற்றப்பட்டது'. அதன் அடிப்படையில், இந்த இயந்திரத்தை சட்டப்பூர்வமாக இயக்க அனுமதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் சுமார் 1,300 பேர் தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள், நாட்டின் இரண்டு பெரிய உதவிபெற்ற தற்கொலை அமைப்புகளான EXIT (Exit இன்டர்நேஷனலுடன் தொடர்பு இல்லை) மற்றும் Dignitas ஆகியவற்றின் சேவைகளைப் பயன்படுத்தி இறந்தனர்.
இந்த இரண்டு அமைப்புகளிலும் தற்போது திரவ சோடியம் பென்டோபார்பிட்டலை உட்கொள்ளும் முறை பயன்பாட்டில் உள்ளது.
மருந்தை உட்கொண்ட பிறகு, அந்த நபர் 2 முதல் 5 நிமிடங்களுக்குள் தூங்கிவிடுவார், பின்னர் ஆழ்ந்த கோமா நிலைக்குச் செல்வார், அதைத் தொடர்ந்து விரைவில் மரணம் ஏற்படும்.
ஆனால், Sarco இப்போது இதுபோன்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் தேவையில்லாமல், அமைதியான மரணத்திற்கு வேறொரு அணுகுமுறையை வழங்குகிறது.
அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட Exit International-ன் நிறுவனர் டாக்டர் பிலிப் நிட்ச்கே (Philip Nitschke) கண்டுபிடித்த, சவப்பெட்டி போன்ற சார்கோ கேப்சூல் (Sarco capsule) இப்போது சுவிட்சர்லாந்தில் முக்கிய இடத்தைப் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Exit International
Sarco capsule என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து Philip Nitschke கூறியதாவது:
இது ஒரு 3-டி அச்சிடப்பட்ட காப்ஸ்யூல் (3-D printed capsule), இறக்க நினைக்கும் நபரால் உள்ளே இருந்து செயல்படுத்தப்படுகிறது.
இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் இழுத்துச் செல்லலாம். இது ஒரு அழகிய வெளிப்புற அமைப்பிலோ அல்லது துணை தற்கொலை அமைப்பின் வளாகத்திலோ இருக்கலாம்.
இறக்க நினைக்கும் நபர் இந்த காப்ஸ்யூலில் ஏறி படுத்துக் கொள்வார். இது மிகவும் வசதியானது.
அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்படும், அவர்கள் பதிலளித்தவுடன், அவர்கள் தங்கள் சொந்த நேரத்தில் பொறிமுறையை செயல்படுத்தும் காப்ஸ்யூலில் உள்ள பொத்தானை அழுத்தலாம்.
காப்ஸ்யூலின் கிழ உள்ள ஒரு உபகரணம், உட்புறத்தில் நைட்ரஜனை நிரப்புகிறது, ஆக்ஸிஜன் அளவை 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கிறது. அந்த நபர் சிறிது திசைதிருப்பப்படுவதை உணருவார், மேலும் சுயநினைவை இழப்பதற்கு முன்பு சிறிது மகிழ்ச்சியாக உணரலாம். முழு விடயமும் சுமார் 30 வினாடிகளில் நடக்கும்.
மரணம் ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறை மூலம் நிகழ்கிறது. எந்த பீதியும் இருக்காது, மூச்சுத் திணறலும் இருக்காது.