புலம்பெயர்தல் ஒரு அளவுக்கு மேல் போனால்... சுவிஸ் அரசின் புதிய திட்டம்
சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை ஒரு அளவுக்கு மேல் போகும்போது, அதைக் கட்டுப்படுத்தும் உரிமை தங்களுக்கு வேண்டும் என சுவிஸ் அரசு கூறியுள்ளது.
ஒரு அளவுக்கு மேல்...
இது குறித்து பேசிய சுவிஸ் புலம்பெயர்தலுக்கு பொறுப்பான அமைச்சரான Beat Jans, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயரும் புலம்பெயர்வோரின் நிகர எண்ணிக்கையும், எல்லை கடந்து வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும், வேலையில்லாதவர்கள் மற்றும் அரசின் உதவி பெறுவோரின் எண்ணிக்கையும், ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும் நிலையில், சுவிஸ் அரசு, அதைக் கட்டுப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
புலம்பெயர்வோர், எல்லை கடந்து வேலைக்கு வருவோர், வேலையில்லாதவர்கள் மற்றும் அரசின் உதவி பெறுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையிலான ஒரு சட்டப்பிரிவை அமுல்படுத்தும் வகையில், சுவிஸ் சட்டத்தில் ஒரு சட்டப்பிரிவை கொண்டுவர சுவிஸ் அரசு விரும்புவதாகவும் Beat Jansதெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |