சுவிட்சர்லாந்துக்கு கடுமையான வரி விதிக்க ட்ரம்ப் முடிவு
ட்ரம்ப் தனது அடுத்த சுற்று வரிவிதிப்புகளை துவங்கிவிட்டார். அவ்வகையில், சுவிட்சர்லாந்துக்கு கடுமையான வரி விதிக்கப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு கடுமையான வரி
இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும், வரிவிதிப்புகளைத் துவங்கினார் ட்ரம்ப்.
பல நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகள் விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு வரி விதிப்புக்குத் தயாராக இருக்குமாறும், 31 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படலாம் என்றும் கூறியிருந்தார் அவர்.
அதன்படியே தற்போது மீண்டும் வரிவிதிப்புகளைத் துவக்கியுள்ளார் அவர். சுவிட்சர்லாந்துக்கோ அதிகபட்சமாக 39 சதவிகிதம் வரி விதிக்கப்பட இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, அதிக அளவில் மருந்தகத் துறையிலிருந்துதான் பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |