அகதிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் செய்தியை வெளியிட்டுள்ள சுவிட்சர்லாந்து
அகதிகள் சிலருக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது சுவிஸ் அரசு.
அகதிகள் மறுகுடியமர்வு திட்டம் நிறுத்தம்
சுவிட்சர்லாந்தில் மறுகுடியமர்வுக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கும் அகதிகளை காத்திருக்குமாறு கூறிவிட்டது சுவிட்சர்லாந்து.
உக்ரைன் போருக்குத் தப்பி ஓடிவரும் 70,000 பேர் உட்பட ஏராளமான அகதிகளை சமாளிக்கத் திணறிவருகிறது சுவிட்சர்லாந்து.
அவர்களுக்கு வழங்குவதற்கான பொருட்களின் அளவு எதிர்பார்ப்பை மீறிவிட்ட நிலையில், எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கும் அகதிகளை மறுகுடியமர்த்தும் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஏஜன்சியின் திட்டம் ஒன்றை நிறுத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது சுவிஸ் புலம்பெயர்தல் அலுவலகம்.
Copyright 2021 The Associated Press.
1,820 அகதிகளை ஏற்றுக்கொள்வதாக வாக்களித்த சுவிட்சர்லாந்து
2023வாக்கில், எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கும் 1,820 அகதிகளை ஏற்றுக்கொள்வதாக சுவிட்சர்லாந்து வாக்களித்திருந்தது. இதுவரை 640 பேர் சுவிட்சர்லாந்து வந்தடைந்துள்ள நிலையில், சுமார் 400 அகதிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனையிலுள்ளன.
இந்த அகதிகள் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் உடல் நலப் பிரச்சினைகள் கொண்ட மக்கள் ஆவர். இவர்களை எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கும் அகதிகள் என ஐக்கிய நாடுகள் அகதிகள் ஏஜன்சி வகைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இவர்களுடைய மறுகுடியமர்வு திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதை இடதுசாரிக் கட்சிகள் விமர்சித்துள்ளன, வலதுசாரிக் கட்சிகள் வரவேற்றுள்ளன.
என்றாலும், 2023ஆம் ஆண்டு துவக்கத்தில் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் Elisabeth Baume-Schneider, இந்த விடயம் குறித்து இறுதி முடிவெடுக்க உள்ளார்.