சுவிஸ் செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! இனி இது கட்டாயமில்லை..
சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் சுவிஸ் கோவிட்-19 சான்றிதழ்கள் இனி தேவைப்படாது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதன் பொருள், சுவிட்சர்லாந்துக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகள் இனி தங்கள் பாஸ்களை சுவிஸ் கோவிட்-19 சான்றிதழாக மாற்ற வேண்டியதில்லை.
உதாரணமாக, சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் 'சுவிஸ்' கோவிட் சான்றிதழ்கள் அல்லது ஆன்டிபாடி அல்லது ஆன்டிஜென் ரேபிட் சோதனைகளுக்குப் பிறகு, இனி தேவைப்படாது.
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் தொடர்ந்து வழங்கப்படும். மற்ற நாடுகளில் இன்னும் நுழைவுக் கட்டுப்பாடுகள் இருக்கும் வரை இவை சர்வதேசப் பயணங்களுக்குத் தேவைப்படும் என்று சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயினும்கூட, இது ஒரு முன்மொழிவு மட்டுமே மற்றும் விவாதத்திற்கு முன்வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சுவிட்சர்லாந்தில் COVID-19 தொற்று விகிதங்கள் அதிகரிகாத்ததால், சில கட்டுப்பாடுகளை நீக்க நாடு முடிவு செய்துள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் நேற்று முதல் (பிப்ரவரி 3) வீட்டில் இருந்து வேலை (Work From Home) செய்ய வேண்டிய தேவைகளை நீக்கபட்டுள்ளது. இனி வீட்டில் இருந்து வேலை செய்வது ஒரு பரிந்துரை மட்டுமே, கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொண்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறையை அரசு முடிவுக்குக் கொண்டுவரபட்டது.
மேலே குறிப்பிடப்பட்ட மாற்றங்களைத் தவிர, மீதமுள்ள கொரோனா வைரஸ் விதிகளை மேலும் தளர்த்த சுவிஸ் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.