சுவிஸில் 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஏற்பட்ட மாற்றம்!
சுவிட்சர்லாந்தில் 18 ஆண்டுகளில் முதன்முறையாக சுவிஸ் தபால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஜனவரி 1, 2022 முதல், அடுத்த நாள் டெலிவரிக்கான (next day delivery) A-Class கடிதத்தை (standard letter) அனுப்புவதற்கான கட்டணம் 10 சதவீதமும், B-Class கடிதத்திற்கான கட்டணம் 6 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுகள் 18 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என்று RTS தெரிவித்துள்ளது.
ஸ்டாண்டர்டு A-வகுப்பு கடிதத்தை அனுப்புவதற்கான கட்டணம் 1.00 சுவிஸ் பிராங்கிலிருந்து 1.10 சுவிஸ் பிராங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்டாண்டர்டு B-வகுப்பு கடிதத்தை அனுப்புவதற்கான கட்டணம் 0.85 சுவிஸ் பிராங்கிலிருந்து இப்போது 0.90 சுவிஸ் பிராங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2021 நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்ட இந்த விலை உயர்வு, சுவிட்சர்லாந்தின் நுகர்வோர் விலைக் கண்காணிப்பாளரால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சுவிஸ் போஸ்ட் எதிர்பார்த்ததில் பாதியை மட்டுமே உயர்த்தியது.
ஜனவரி 1, 2022 முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தாலும், வாடிக்கையாளர்கள் பழைய முத்திரைகளைப் (Stamps) பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், பழைய விலையை மட்டுமே உள்ளடக்கிய முத்திரைகளுடன் போஸ்ட் செய்யப்படும் கடிதங்களை ஜனவரி 2022 இறுதி வரை ஏற்றுக் கொள்வதாக சுவிஸ் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பிப்ரவரி 1, 2022 முதல், முழு புதிய விலைக்கு சமமான முத்திரைகள் தேவைப்படும், அதாவது பழைய முத்திரைகளை வைத்திருக்கும் எவரும் 5 மற்றும் 10 சென்ட் டாப்-அப் முத்திரைகளைப் பெற வேண்டும்.
சுவிட்சர்லாந்தில் பேக்கேஜ்களை அனுப்புவதற்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.