சுவிட்சர்லாந்தில் கடுமையான விதிமுறைகள் அமுல்!
சுவிட்சர்லாந்து முழுவதும் திங்கட்கிழமை முதல் (டிசம்பர் 20-ஆம் திகதி) முதல் கடுமையான கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார் எண்ணிக்கை அதிகரித்துவருவதாலும் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளின் பணிச்சுமை காரணமாகவும், வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டிய கட்டாய முறையை சுவிஸ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் கொரோனா வைரஸிலிருந்து சமீபத்தில் மீண்டதற்கான ஆதாரத்தைக் காட்டக்கூடியவர்கள் மட்டுமே இப்போது உணவகங்கள், சினிமாக்கள் மற்றும் ஜிம்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
டிசம்பர் 20 முதல், புதிய விதிகளின் கீழ், "தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் மட்டுமே உணவகங்கள், கலாச்சாரம், விளையாட்டு மற்றும் ஓய்வு வசதிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளை அணுக முடியும்" என்று சுவிஸ் அரசாங்கம் குறிப்பிட்டது.
இருப்பினும், அவர்களுக்கு முகக்கவசங்கள் கட்டாயம் மற்றும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது சாத்தியமில்லை என்றால், குறிப்பாக, பாடகர் ஒத்திகைகளில், அத்துடன் இருக்கைகள் ஒதுக்கப்படாத இடங்கள் இருந்தால், உதாரணமாக டிஸ்கோக்களில், பார்வையாளர்கள் தங்கள் கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் அல்லது சமீபத்தில் தொற்றிலிருந்து மீண்டதற்கான சான்றுகளுடன் கூடுதலாக PCR சோதனையைக் காட்ட வேண்டும்.
தனிப்பட்ட சந்திப்புகளுக்கும் (private meetings) கட்டுப்பாடுகள் உள்ளன: அதிகபட்சம் பத்து பேர் மட்டுமே தனிப்பட்டமுறையில் சந்திக்க அனுமதிக்கப்படும். அவர்கள் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அதேபோல், வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்பு உள்ள அனைவருக்கும் மீண்டும் Work From Home கட்டாயமாக்கப்பட்டுள்ளது.